அண்ணனின் பழைய டையலாக்கை ராஜிவ் காந்தியின் சமாதியில் தூசு தட்டி கிளப்பிய தம்பி ..!

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப்பட்டு உள்ளது 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தனது நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது ராஜீவ்காந்தியின் நினைவு தூண் அருகே நின்றுகொண்டு டிக் டாக் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீர டையலாக்கான....

"பிரபாகரனின் பிள்ளைகள் நாங்க தாண்டா... சுட்டோம்...
எங்க இனத்திற்கு ஒரு பெருமை இருக்கு ...நீ எப்பேர்ப்பட்ட கொம்பனாவது இரு....
நீ எந்த நாட்டின் அதிபனாவது இரு... என் இனத்தை தொட்டால் உன்னை தூக்குவோம் டா..." என்ற இந்த டயலாக்கை பேசி டிக்டோக் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலையில் துரைமுருகனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு தருணத்தில், இந்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார் துரைமுருகன் 

அதில்,"கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு தனது நண்பர்களுடன் சென்ற போது விளையாட்டாக எடுத்த வீடியோ அது.. இவ்வாறு பதிவிட்டது தவறு என்பதால் அதனை பதிவிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் நீக்கி விட்டேன். இருந்தாலும் இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்தவர்கள் தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர்.இந்த வீடியோ எந்த உள்நோக்கத்துடனும் எடுக்கப்படவில்லை... யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்கவும்" என தெரிவித்து உள்ளார்.