மது குடிக்க ரூ.50 கொடுக்காத மனைவி கொடூர கொலை.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்.!
கோவை மாவட்டம் முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் குடிபழக்கம் காரணமாக மனைவி தெய்வானையிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒத்தக்கால் மண்டபம் ஆற்றங்கரையில் துணி வைத்துக்கொண்டிருந்த தனது மனைவியிடம் குடிப்பதற்கு 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
மது குடிக்க ரூ.50 கொடுக்காத மனைவியை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை மாவட்டம் முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் குடிபழக்கம் காரணமாக மனைவி தெய்வானையிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒத்தக்கால் மண்டபம் ஆற்றங்கரையில் துணி வைத்துக்கொண்டிருந்த தனது மனைவியிடம் குடிப்பதற்கு 50 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
ஆனால், பணம் தர மனைவி தெய்வானை மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துசாமி கத்தியை எடுத்து நெஞ்சு, வயிறு உள்ளிட்ட 6 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி தெய்வானை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறைக்கு பயந்து முத்துசாமி தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை முயன்றுள்ளார். அலறம் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து, முத்துசாமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், முத்துசாமி கிணத்துக்கடவு காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி முத்துசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் நக்கீரன் அமர்வு விசாரித்தது. விசாரணையில் முடிவில் கோவை நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து, கணவரின் மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.