திமுக எம்.பி. ரமேஷ் நினைவு இருக்கா? வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு.. ஐகோர்ட் அதிரடி!

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டிஆர்விஎஸ். ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் (55). இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடித்து கொலை செய்யப்பட்டார். 

Murder case against DMK MP Ramesh... Petition to change to another court dismissed tvk

கடலூர் திமுக எம்.பி  ரமேஷுக்கு எதிரான கொலை வழக்கின் விசாரணையைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டிஆர்விஎஸ். ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் (55). இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மழை வச்சு செய்யப்போகுதாம்.! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

இந்நிலையில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் த சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: துண்டுச்சீட்டு முதல்வர்! வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம்! ஊழல் காரணமாக ஆட்சியை இழந்த கட்சி! TTV விளாசல்!

இந்நிலையில், வழக்கு விசாரணையை அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை என மீண்டும் செந்தில்வேல் குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணைக்காக எனக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை. இது அரசு தரப்பு மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் எனக்கு நியாயம் கிடைக்காது என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இருப்பினும், அரசு வழக்கறிஞரை மாற்றுவது தொடர்பாக சிபிசிஐடி-யிடம் முறையிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios