சென்னை போரூர் அருகே வாய் பேசமுடியாத மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் போரூர் அடுத்த தெள்ளியார் அகரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்க பிரதீப் (4), சக்திவேல் (2) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்ளுக்கு வாய் பேச முடியாமலும், காதுகேளாமும் உள்ளது.

இதையடுத்து, பிரதீப்பை டாக்டரிடம் அழைத்து சென்று, பேச்சு  பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் சக்திவேலையும் சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவனுக்கும் வாய்பேச முடியாத பிரச்னை இருந்தது  கண்டு பிடிக்கப்பட்டது. இதை குணமாக்குவது கடினம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அஸ்வினி, மூத்த மகன் பிரதீப்பை நேற்று அவனது பாட்டி வீட்டுக்கு மகேஷுடன் அனுப்பி வைத்தார். அங்கு மகனை விட்டுவிட்டு, மகேஷ் வீடு திரும்பினார். அங்கு வீட்டின் அறையில் அஸ்வினி, தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அருகில், 2வது சக்திவேல், மயங்கிய நிலையில், கட்டிலில் கிடந்தான். அவனை எழுப்பியபோது, இறந்துவிட்டான் என தெரிந்தது. இதனால், அவர் கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து போரூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.