Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் எல்லாமே மாறப்போகுது.. மாஸ் காட்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - ஜூன் 13 ஸ்டார்ட் !!

ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Minister Udhayanidhi Stalin says World Cup Squash match is going to be held in chennai
Author
First Published May 23, 2023, 3:11 PM IST

ஸ்குவாஷ் போட்டிகள் ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் தமிழகத்தின் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழக விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

Minister Udhayanidhi Stalin says World Cup Squash match is going to be held in chennai

வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம்  தேதி வரை நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேஷியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியை நடத்த 1. 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியையும் இடம் பெறச்செய்யும் முயற்சிவும் இது இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, இந்தப் போட்டிகளைக் காண்பது என்பது பொதுமக்களுக்கும் ஸ்குவாஷ் விளையாட்டு ரசிகர்களுக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.

நம்முடைய அரசு இதுபோன்று சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதற்காக பல்வேறு முயற்சிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதையும் படிங்க..மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை.! முழு விபரம்

Follow Us:
Download App:
  • android
  • ios