மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சி… தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சியையும் பொருடகளை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

minister udayanidhi stalin inaugurated exhibition of products produced by womens self help groups

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் அடங்கிய கண்காட்சியையும் பொருடகளை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனைக் கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்ததோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் அடங்கிய பொங்கல் பரிசு பெட்டகங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் சென்றடையும் வகையில், இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தாயார் மறைவு.. தமிழக தலைவர்கள் அஞ்சலி.!!

இந்த கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான முந்திரிப் பருப்பு வகைகள், மசாலாப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நாட்டுச் சர்க்கரை, சத்து மாவு, சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள். பொம்மைகள், காபிப் பொடி, மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச் சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க: புத்தாண்டு அன்று பைக்ரேஸ் நடப்பதை தடுக்க நடவடிக்கை... புதிய வியூகம் வகுத்த சென்னை காவல்துறை!!

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சுனை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 30 ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 12 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios