நாட்டிலேயே இந்தியா கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியை கொடுத்த ஒரே மாநிலம் தமிழகம் தான் - அமைச்சர் பெருமிதம்

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும்  இந்தியா கூட்டணி 100 சதவித வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் முதலமைச்சரின் ஆட்சியில் செய்த பல்வேறு திட்டகள்கள் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.

Minister Ma Subramanian has said that only in Tamil Nadu in the country, India alliance has got 100 percent success vel

சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் வெங்கடேசன் தலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101 வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பாட்டு பட்டிமன்றம் கோவிலம்பாக்கத்தில் நடைபெற்றது. 

கலைஞரின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய ஞானமா? அரசியல் ஞானமா? என்ற தலைப்பில் கலைஞர் அவர்களின் ஆட்சியில் செய்த மக்கள் நலதிட்டங்கள், தாய்மொழி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், எடுத்துரைத்து பாடல் பாடியும் அசத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

OMNI BUS : தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது.!! முன்பதிவு செய்த பயணிகளுக்கு வந்த ஷாக் தகவல்

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும்  இந்தியா கூட்டணி 100 சதவீத வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் முதலமைச்சர் அவர்களின் இந்த ஆட்சியில் செய்த பல்வேறு திட்டகள்கள் தான். குறிப்பாக காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம், இலவச பேருந்துபயணம், கலைஞர் உரிமை தொகை இதுபோன்ற திட்டகளை நிறைவேற்றி இந்த நாட்டிற்கு முதலமைச்சர் ஆற்றிவரும் பணிகள் மிகப்பெரிய அளவிலான வெற்றியை தந்துள்ளது. 

Madurai Adheenam: நானும் தமிழன் தான்; அரசியல் பேச எனக்கு உரிமை உள்ளது - மதுரை ஆதீனம் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.480 கோடி செலவில் 1000 படுக்கை வசதியுடன்  கலைஞர் பெயரில் மருத்துவமனை, மதுரையில் இந்தியாவில் பெரிய நூலகம் மற்றும் ஜல்லிகட்டு அரங்ககம் இப்படி பிரமாண்டங்களை கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்தி வருகிறார். மேலும் ஒரு சிறப்பான செய்தி சோழிங்கநல்லூரில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 105 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அந்த 105 ஏக்கர் நிலத்தில் பெரிய விளையாட்டு நகரம் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

அதே போல் கலைஞர் பெயரில் இந்தியாவில் முதல்முறையாக முட்டுகாட்டில் ரூ.432 கோடி  செலவில் 37 ஏக்கரில் கலைஞர் பண்ணாட்டு அரங்கம் வரவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் விடபட்டுள்ளது. இப்படியாக சோழிங்கநல்லூருக்கு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செய்துவருகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios