சொந்த தொகுதியிலேயே, டெபாசிட் வாங்க முடியாதவர் அமைச்சர் ஜெயகுமார் என, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களிடம் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருச்சியில் இன்று நடந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீருக்காக, பல இடங்களில் அலைந்து திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், இந்த நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எங்களை லெட்டர் பேடு கட்சி என்று, அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். தனது சொந்த தொகுதியிலேயே, அவரால் டெபாசிட் வாங்க முடியாவில்லை. அவருக்கு, எங்களை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அதிமுகவில் பதவி ஆசையை காட்டி, எங்கள் கட்சியினரை இழுக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் திரும்பி வருவார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சியினருடன் கூட்டணி அமைத்தோ, அல்லது தணித்தோ போட்டியிடுவோம். என்றார்.