தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்? சிப்காட் போராட்டம் பற்றி அமைச்சர் எ.வ வேலு காட்டம்.!!
தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும் என்று அமைச்சர் எ. வ. வேலு செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டம் குறித்து காட்டமாக பேசியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட் அலகு 3 விரிவாக்க பணிக்கு 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டத்தினை கைவிட வலியுறுத்தி மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை நெடுங்கல் உள்ளிட்ட 9 ஊர் கிராம மக்கள் கடந்த 125 நாட்களாக தனியார் நிலம் ஒன்றில் கொட்டகை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு போலீசார் கொட்டகையை அகற்றி போராட்டகாரர்களுக்கு ஆதரவாக இருந்த 20 நபர்களை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருபது நபர்களையும் வேலூர், மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட சிறைச்சாலையில் அடைத்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இருபது நபர்களில் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ், உள்ளிட்ட ஏழு நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “விவசாயிகளை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுடான் அரசின் நோக்கம். ஆனால் தொழிற்சாலைகள் இருந்தால்தான் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முடியும். தொழிற்சாலையை வானத்திலா கட்ட முடியும்? நிலத்தில்தான் கட்ட முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியிலிருந்து வந்தெல்லாம் ஒருவர் போராடியிருக்கிறார். 7 பேரின் குடும்பத்தார் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஒரு நல்ல தீர்வைக் கொடுக்க முதல்வரிடம் வேண்டுகோள் வைப்பேன்” என்று கூறினார்.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..