Asianet News TamilAsianet News Tamil

அவன் என் மகன் இல்லை... அமைச்சர் சி.வி.சண்முகம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

தன் மகன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

minister CV shanmugam police complained
Author
Tamil Nadu, First Published Jun 26, 2019, 4:58 PM IST

தன் மகன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். minister CV shanmugam police complained

சென்னை திருவான்மியூரில் இருந்து சொகுசு கார் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. நீலாங்கரை அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக உருண்டோடியது. வேகத்தின் காரணமாக கார் நிற்காமல் சாலையோரம் இருந்த ஜூஸ் மற்றும் இளநீர் கடைகளுக்குள் புகுந்து சுற்று சுவரில் மோதி நின்றது.

 minister CV shanmugam police complained

இந்த காரில் இருந்த வாலிபர் நவீன் தள்ளாடியபடி வெளியே வந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் காவலர்களை மிகவும் ஆபாசமாக பேசியும், காவலர்கள் என்றும் பாராமல் சீருடையை பிடித்து இழுத்தும் கன்னத்தில் அறைந்தும் தகராறில் ஈடுபட்டார். இதனிடையே, குடிபோதையில் ஆபாசமாக திட்டிய நவீன் என்பவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. minister CV shanmugam police complained

இந்நிலையில், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டி அவர்களிடம் தகராறு செய்தவர் என் மகன் இல்லை என்றும், தன் மகன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios