Asianet News TamilAsianet News Tamil

இயல்பை மீறி கொட்டித் தீர்த்த பருவமழை..! சென்னையில் 39 சதவீதம் அதிகம் என வானிலை மையம் தகவல்..!

ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் சென்னையில் பதிவான மழையின் அளவு 59 சென்டிமீட்டர். இது இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக காணப்படுகிறது.

metrological department's statement about southwest monsoon
Author
Chennai, First Published Sep 27, 2019, 5:46 PM IST

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் அணைகள் வேகமாக நிரப்பி வந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில்  தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகளவில் பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

metrological department's statement about southwest monsoon

இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரை கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்த மழையின் அளவு 48 சென்டிமீட்டர். இது இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக இருக்கிறது. ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் சென்னையில் பதிவான மழையின் அளவு 59 சென்டிமீட்டர். இது இயல்பை விட 39 சதவீதம் அதிகமாக காணப்படுகிறது.

metrological department's statement about southwest monsoon

வடகிழக்கு பருவமழையை பொருத்தவரையில் தெற்காசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios