அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி விடுகின்றன . இதனால் விரைவாக டிக்கெட் வழங்க முடிவதில்லை.

இன்று காலையும் டிக்கெட் வழங்கும் இயந்திரதத்தில் பழுது ஏற்பட்டது  . அதை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும் என தெரிந்ததால் மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது .

அதன்படி கோளாறு சரிசெய்ய படும் வரையில் பொது மக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என கூறியது  . இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர் .

3 மணி நீடித்த இயந்திர கோளாறு தற்போது சரி ஆகியுள்ளது  . இதனால் மீண்டும் டோக்கன் கொடுக்க தொடங்கப்பட்டுள்ளது . காலையில் இருந்து நீடித்த இலவச பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது .