தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது, அடுத்த இரண்டு தினங்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்... 

இது குறித்து மேலும் தகவல் தெரிவித்த அவர், தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது, இது வடமேற்கு அல்லது மேற்கு  பகுதியை நோக்கி நகர இருக்கிறது, தென்தமிழகம், புதுவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், சென்னை ஒரு சில இடங்களில் மழை பெய்யும் 50 இருந்து 60 கிமீ வங்க கடலில் சூரை காற்று வீசக்கூடும், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்கள் மீனவர்கள்  கடலுக்கு செல்ல வேண்டாம்,

 

காஞ்சிபுரம்,  விழுப்புரம்,  திருவண்ணாமலை,  கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது,இத்துடன்  

மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது அதாவது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சூறைக்காற்று மணிக்கு ஐம்பதிலிருந்து அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா கடல் மற்றும் தமிழகப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது