Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் இந்த 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் எச்சரிக்கை...!

தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

meteorological center warning thunderstorm in Nellai, kanniyakumari, Tuticorin
Author
Chennai, First Published Mar 20, 2021, 4:30 PM IST

தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோரம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.0 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22 தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

meteorological center warning thunderstorm in Nellai, kanniyakumari, Tuticorin

மேலும் மார்ச் மாதம் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்,  அதே நாட்களில் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்  வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

meteorological center warning thunderstorm in Nellai, kanniyakumari, Tuticorin

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு எதுவும் பதிவாகவில்லை எனக்குறிப்பிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios