சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்  ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

இந்நிலையில், தஹில்  ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  அதன்படி தற்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

இவர், சத்தீஸ்கர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஏ.கே.மிட்டல் 1977-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். தொடர்ந்து பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இவர் 2004-ம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூன் வரை பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த அவர், இந்த ஆண்டு மே 28-ம் தேதி மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது இவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. 

இந்தியாவின் மிகப் பழமையான நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை சேர்த்து 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. தற்போது 60 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.