சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 1,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் முதுகலை மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.