மருத்துவ உபகரணங்களை இனி எந்த மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அதிரடியாக தடை விதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால், பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கையாக மாஸ்க், வென்டிலேட்டர்வர்களை வாங்கி வருகின்றனர். இதனால், ஒரு சில மாநிலங்களில்  மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு  மருத்துவ உபகரணங்களை இனி எந்த மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

இதையும் படிங்க;-மசாஜ் சென்டரில் விபசாரம்... மஜாவாக இருக்கும் விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள்.. 2 மணி நேரத்துக்கு ரூ.3500..!

இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது தொடர்பாக அதிகாரமளிக்கப்பட்ட மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றை தயாரிப்பது கொள்முதல் செய்வது ஏற்றுமதி, இறக்குமதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 அதில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களாகிய எண் 95 முக கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர்களை கொரோனா பாதுகாப்பிற்காக முன்கூட்டியே வாங்கி கொள்கின்றனர். இதனால் சில மாநிலங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களாகிய எண் 95 முகக் கவசங்கள்,  வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவைகளை இனி கொள்முதல் செய்யக்கூடாது. 

இதையும் படிங்க;- தலைக்கேறிய காமம்... உல்லாசத்திற்கு வர மறுத்த கள்ளக்காதலி... ஆத்திரத்தில் கட்டிட மேஸ்திரி விபரீத முடிவு..!

இதனை மத்திய சுகாதாரத்துறை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும். சில மாநிலங்கள் தேவைக்கு அதிகமாக உபகரணங்கள் கொள்முதல் செய்து, பயன்படுத்தாமல் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், பல மாநிலங்களின் வென்டிலேட்டர்கள் இயங்காத நிலையில் பழுதடைந்துள்ளது. அதனை மாநில சுகாதார சரிசெய்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். இதேபோல், இவைகளை இயக்குவதற்கான ஆட்களை தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு மாநில அரசுகளின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.