மிரட்டும் மாண்டஸ் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் மூடல்.!

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 390 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 310 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. 

Mandous Cyclone Echo.. Closure of Corporation parks, Sports Grounds

மாண்டஸ் புயல் காரணமாக மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று காலை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 390 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 310 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் படிங்க;- மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி… அரசு பேருந்துகள் இயங்காது… விமான சேவையிலும் மாற்றம்!!

Mandous Cyclone Echo.. Closure of Corporation parks, Sports Grounds

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

Mandous Cyclone Echo.. Closure of Corporation parks, Sports Grounds

அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  மாண்டஸ் புயல் எச்சரிக்கை… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்ததெந்த மாவட்டங்கள்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios