சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கடந்த 18ஆம் தேதி சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்திருக்கிறார்.

Man seriously injured in a cow stampede in Chennai dies sgb

சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களுக்குத் தலைவலியாக மாறியுள்ளன. இந்த மாடுகள் பொதுமக்களை விரட்டுவதும், திடீரென முட்டித் தாக்குவம் என அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்குத் தீர்வு காண மாநாகராட்சி சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், சிகிச்சை பலனனளிக்காமல் சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

கடந்த 18ஆந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் சுந்தரத்தை மாடு முட்டியது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 நாள்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, முதியவர் சுந்தரத்தை முட்டிய காளை மாடுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு ஒன்று முட்டித் தள்ளியது. உடனே அப்பெண் குழந்தையுடன் பக்கத்து வீட்டிற்குள் ஓடி ஒளிந்து தப்பினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios