சென்னை ஓட்டேரி சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (20). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராம்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன்,1000 ரூபாய் பணம் மற்றும் அவரது நண்பர் சந்தோசிடம் இருந்த செல் போனையும் பறித்து சென்றனா். 

இதுபற்றி ராம்குமார் ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய உதவி ஆய்வாளர் வானமாமலை சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். 

இந்தநிலையில் நேற்று வாகன தணிக்கை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசை கண்டதும் தப்பியோட முயன்றனா். இதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் தலைமறைவானார், விசாரணையில் அவர் ஓட்டேரியை சேர்ந்த கோட்டிஸ்வரன் என்பது தெரியவந்தது. 

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய அழகேசன் என்பவரை தேடி வருகின்றனா்.