தமிழ்நாட்டில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்த நிலையில், இன்று பரிசோதனை எண்ணிக்கை 800 ஐ எட்டியுள்ளது. இது கடந்த 10 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட அதிகம்.  

மற்ற மாநிலங்களை விட தினமும் தழகத்தில் தான் அதிகமாக கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை மொத்தம் 4,42,970 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் அரசு தரப்பில் 42 பரிசோதனை மையமும், தனியார் சார்பாக 28 கொரோன ரத்த பரிசோதனை மையமும் இயக்கி வருகிறது. 

அந்த வகையில் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில், 817 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ,881 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பரிசோனைக்கு 11 ,231 பேரிடம் ரத்த  பெறப்பட்டுள்ளது. அதே போல் இன்று ஒரே நாளில் மொத்தம் 567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.