பிப்.1ல் மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஜி 20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் நடப்பாண்டில் இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 1ம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி 20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்; சோகத்தில் கிராம மக்கள்
இதே போன்று புதுச்சேரியில் வருகின்ற 30, 31 ஆகிய தேதிகளில் ஜி 20 தொடக்கநிலை மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி காந்தி திடலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதன் கிழமை நடைபெற உள்ளது.
பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை; காவல் துறை விசாரணை
இந்நிலையில், ஜி 20 மாநாடு நடைபெறும் இடம், மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதிநிதிகள் தங்கும் விடுதி இருக்கும் இடம் என 5 இடங்களில் நாளை காலை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மாநாட்டை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.