Asianet News TamilAsianet News Tamil

கோரதாண்டவம் ஆடும் கொரோனா... இடைக்கால உத்தரவுகள் ஜூன் 30 வரை நீட்டிப்பு...!

கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.


 

Madras HC extend all Lower court interim orders to june 30
Author
Chennai, First Published May 17, 2021, 6:31 PM IST

கொரோனா தொற்றுக்கு திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பலியானதைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்ற பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைத்து பிறப்பித்துள்ள உத்தரவை  சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Madras HC extend all Lower court interim orders to june 30

கொரோனா பரவல் காரணமாக நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் கொரோனா தொற்றால் காலமானார். இதையடுத்து இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்த உத்தரவின் படி,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேவையின்றி நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள் நீதிமன்றக் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Madras HC extend all Lower court interim orders to june 30

கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 30 வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். குற்ற வழக்கில்  கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை ஜூன் 30 வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பு அகற்றம், சட்டவிரோத கட்டுமானங்கள் இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios