சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலைப் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். 
 

luxury car fire burned in chennai tambaram

சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர் சதீஷ், காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் உடனடியாக காரில் இருந்து இறங்கினர்.

திருச்சியில் 3 வயது குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்டு அசத்திய காவல் துறை

இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீ பற்றி  எரியத் தொடங்கியது, பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தாம்பரத்தில் இருந்து விரைந்து வந்தனர். இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன்னரே கார் முற்றிலும் எரிந்து சேதமைடைந்தது. இதனால் தாம்பரம் , மதுரவாயல் புறவழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இன்றும் நாளையும் கனமழை.. 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட்

விசாரணையில் காரில் பயணித்த சதீஷ் காரைக்குடியில் இருந்து நொளம்பூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு வந்ததாகவும், இன்று வண்டலூர் செல்ல காரில் வந்த போது தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios