Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 2 நாளில் லேசான மழை… - வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Light rain over the next 2 days
Author
Chennai, First Published Jun 22, 2019, 4:50 PM IST

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

வெப்பசலனம் காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி,கோவை, திண்டுக்கல், நெல்லை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வெப்ப சலனத்தால், சென்னையில் அடுத்த 2 நாளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து வருகிறது. விரைவில் மழை பெய்து, வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.

கடந்த 24 மணி நேரத்தில், வேடசந்தூரில் 7 செ.மீ., தேவாலாவில் 4 செ.மீ., பெரியாறு, நடுவட்டம் பகுதிகளில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம், களியாக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios