Asianet News TamilAsianet News Tamil

ஜூன் 28ல் சட்டமன்ற கூட்டம் – மானிய கோரிக்கை விவாதம் தொடங்கும்

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்குவதாகவும், தொடர்ந்து 23 நாட்கள் நடந்து ஜூலை 30 முடியும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

Legislative meeting on June 28th
Author
Chennai, First Published Jun 24, 2019, 1:55 PM IST

தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் ஜூன் 28 தொடங்குவதாகவும், தொடர்ந்து 23 நாட்கள் நடந்து ஜூலை 30 முடியும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

வரும் ஜூன் 28ம் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கும். அன்று இரங்கல் தீர்மானம் வாசித்த பின்னர், அஜண்டா வழங்கப்படும். இதையடுத்து, ஜூலை 1ம்தேதி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படுமா என்பது அஜண்டா வழங்கிய பிறகே தெரியும்.

Legislative meeting on June 28th

ஜூலை 1ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, 3ம் தேதி கூட்டுறவு, 4ம் தேதி எரிசக்தி மற்றும் மதுவிலக்கு, 5ம் தேதி மீன்வளம் மற்றும் பால்வளம், 8ம் தேதி நகராட்சி நிர்வாகம், 9ம் தேதி நீதி நிர்வாகம், 10ம் தேதி சமூக நலம் மற்றும் சத்துணவு மானியக் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்.

அதேபோல, ஜூலை 11ம் தேதி தொழில்துறை மீதான மானிய கோரிக்கையும், 12ம் தேதி, கைத்தறி மற்றும் துணிநூல், செய்தி மற்றும் விளம்பரத்துறை விவாதம், 15ம் தேதி நெடுஞ்சாலைத்துறை, 16ம் தேதி மக்கள் நல்வாழ்வு 17ம் தேதி, வேளாண்துறை, 18ம் தேதில் சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை, 19ம் தேதி வருவாய்துறை, 22 மற்றும் 23ம் தேதி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகளும் விவாதிக்கப்படும், மொத்த கூட்டத்தொடர் 23 நாட்கள் நடைபெறும் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios