மக்களுக்கு உடனுக்குடன் நீதிபரிபாலனம் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.   மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 

பொதுவாக நீதிமன்றங்கள் என்று சொன்னாலே, அப்பப்பா  சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேலப்பா... என்று நீதமன்றங்களை பார்த்து பலர் அஞ்சுவதுண்டு. அதற்கு காரணம்,   ஒரு சிறு பிரச்சனை என்று நீதிமன்றங்களுக்கு போனால் கூட, வாய்தா மேல் வாய்தா வாங்கி குறைந்தது பத்து முதல் பதினைந்து ஆண்டுகளாவது  இழுக்கடித்து, நம்மை அலைகழித்து பாக்கெட்டை காலி செய்து வேண்டாம் சாமி வம்பு என்று  தலை தெறிக்க ஒட வைத்து விடுவார்கள் என்பதனால்தான் அப்படி.  காலவிரையம்,  அலைகழிப்பு,  என்பதுதான்  நீதித்துறை மீது  மக்களுக்கு உள்ள பொதுவான பார்வையாக  இருந்து வருகிறது. 

அத்தனையும் இப்போது தலைகீழாக மாறி,  வழக்குகள் வந்தால் விரைந்து விசாரித்து,  அதை உடனுக்குடன் விசாரித்து சுடசுட தீர்ப்புகள் வழங்க பல அதிரடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு நீதி பரிபாலங்கள் நடந்து வருகிறது.  என்ற நிலை நாட்டில் தற்போது உருவாக்குப்பட்டு வருகிறது.  அதற்கு சான்றாக இந்திய நீதி அறிக்கை என்ற தலைப்பில் நாடுமுழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்  புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  இதில் நீதிமன்றம் ,  போலிஸ் சட்ட உதவி  ஆகியவைகள் மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்வதில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்  மகாராஷ்டிர மாநிலத்துக்கு முதலிடமும்,  கேரளத்திற்கு இரண்டாவது இடமும்,   தமிழகம் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

 

நீதித்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள. புதிய கட்டமைப்புகள் மற்றும் நிர்வாக வசதிகள் காரணமாக வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருவதுடன் மக்கள் நீதிமன்றத்தில் காத்துக் கிடப்பது,  தவிர்க்கப்பட்டுள்ளது.  அத்துடன் நீதித்துறை மற்றும் காவல் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் இடம்பெற்றுள்ளன.  ஒரு கோடிக்கும் குறைவான உள்ள மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை பொருத்தவரையில் கோவா முதலிடத்திலும், சிக்கிம் இரண்டாம் இடத்திலும்  உள்ளன.