வெப்பச்சலனம் காரணமாக சென்னை  மற்றும் அதன் புறநகர் பகுதிகள்  மற்றும் கடலோர மாவட்டங்களில் திடீர்  மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இந்தாண்டு  வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை கொட்டி தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மழை வலுவிழந்து உள்ளதால்,  இந்த ஆண்டு மழை  அவ்வளவுதானா என்ற ஏமாற்றம் உயர்ந்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிக மழை கொட்டு,  நீர்நிலைகள் நிரம்பி  வழிவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ல்  பருவ மழை தொடங்கியது .  ஆரம்பத்தில் மழை சற்று கனமாக பெய்த நிலையில்  பிறகு படிப்படியாக குறைந்து பொய்த்துப்போனது  எதிர்பார்த்த அளவிற்கு இந்த ஆண்டு மழை பெய்யாதது  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்மேற்கு பருவமழை காலம் முடிய  இன்னும் ஒருசில வாரங்களே  உள்ள நிலையில் கடந்த இரண்டு வார காலமாக பருவமழை குறைந்தே காணப்பட்டது .  வடகிழக்கு பருவமழை போதிய அளவில் இல்லை என்பதால்  மழை இத்தோடு முடிந்து விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  அதேபோல டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம்  உள்ளதால்,  அடுத்த மாதம் முதல் வாரம் வரை மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு 7 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரம் ,  முத்துப்பேட்டை 2 சென்டிமீட்டர் மழையும்,  தூத்துக்குடி ,  அதிராம்பட்டினம் ,  சீர்காழியில் ,  ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது . அடுத்த 24 மணிநேரத்தை  பொருத்தவரையில் சென்னை ,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதிகள் உட்பட,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக திடீர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.