சென்னை நுங்கம்பாக்கத்தில் லான்சன் டொயோட்டா உரிமையாளரின் மனைவி ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் என்பவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லான்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவனத்தின் இயக்குநராக லிங்காலிங்கம் இருந்து வருகிறார். இவருடைய மனைவி ரீட்டா அந்நிறுவனத்தின் இணை இயக்குநர் பொறுப்பில் உள்ளார். தமிழகத்தில் லான்சன் டொயோட்டா ஒட்டுமொத்தமான டீலர் ஷிப்பை வைத்துள்ளனர். பல்வேறு இடங்களில் ஷோருமையும் நடத்தி வருகின்றனர். 

இவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கோத்தாரி என்ற சாலையில் வசித்து வருகின்றனர். நேற்று யாரும் இல்லாததால் ரீட்டா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவருடை அறை திறக்கப்படாததால் வேலையாட்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து ரீட்டாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

இது தொடர்பாக போலீசார் விசாரணையில் லான்சன் டொயோட்டா விற்பனையில் இணை இயக்குநராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு பகுதியில் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, விற்பனை நிறுவன மேலாளர்களை குறை சொன்னதாக கூறப்படுகிறது. இதனால், இந்த விவகாரத்தில் லேன்சன் டொயோட்டா நிறுவனத்தின் இயக்குநரான லிங்காலிங்கத்திற்கும் அவரது மனைவிக்கும் ரீட்டாவின் தொழில் ரீதியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆலோசனை கூட்டத்தில் ரீட்டா நடந்து கொண்டது தொடர்பாகவும் கடுமையாக கண்டித்துள்ளார்.

 

 

இதனால், தொழில் ரீதியான ஏற்பட்ட பிரச்சனை குடும்ப பிரச்சனையாக வெடித்தது. இதனையடுத்து, நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோபித்துக்கொண்டு கணவர் வெளியில் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரீட்டா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது. அப்படி இருந்த போதிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.