Asianet News TamilAsianet News Tamil

#BREAKING லலிதா ஜுவல்லரியில் ஐடி ரெய்டு.. கணக்கில் வராத ரூ.1,000 கோடி சிக்கியது.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.!

லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

lalitha jewellery income tax raid... Rs. 1,000 crore Confiscation
Author
Chennai, First Published Mar 7, 2021, 12:16 PM IST

லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 4ம் தேதி வருமான வரிசோதனை நடைபெற்றது. அதன் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என  27 இடங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. 

lalitha jewellery income tax raid... Rs. 1,000 crore Confiscation

இந்த சோதனையில் ரூ.1000 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாத இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இவர்கள் டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

lalitha jewellery income tax raid... Rs. 1,000 crore Confiscation

தங்கம் இருப்பு தொடர்பாக பல்வேறு முறைகேடுகளையும் லலிதா ஜுவல்லரி நகைக்கடை ஈடுபட்டிருப்பதும், கணக்கில் வராத சொத்துக்களும் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என வருவான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுமட்டும் இல்லாமல் போலியான வங்கி கணக்கை தொடங்கி அதில் வருமானத்தை டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios