சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயா . சென்னை மாநகராட்சியில் சாலைப் பணியாளராக வேலை செய்து  வருகிறார் . இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் . ஜெயாவின் சகோதரி தேவி கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயாவின் வீட்டில் வந்து தங்கியுள்ளார் .

இந்த நிலையில் தான் கடந்த 12 ம் தேதி ஜெயா நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக தேவி அதிகாலை நேரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை எழுப்பி அழுதுபுலம்பியுள்ளார் . ஆனால் ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் உறவினர் ராஜா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . 

காவல்துறையினர் வந்து ஜெயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . பரிசோதனையின் முடிவில் ஜெயா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது .இதையடுத்து தேவியை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார் . இதனால் மீண்டும் தேவியிடம் விசாரணை செய்தனர் . 

போலீசாரின் கேள்விகளுக்கு திணறிய தேவி ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார் . இரண்டு கூலிப்படை நபர்களை வைத்து அதிகாலையில் ஜெயாவை தான் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார் . தனது தந்தையின் அரசு வேலையை ஜெயா வாங்கி கொண்டார் , சொத்துக்களுக்கும் உரிமம் கொண்டாட வருவார் என நினைத்து கொலை செய்ததாக தேவி கூறினார் . 

இதையடுத்து அவரை  கைது  செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தததாகவும் , அது கொலையாளியை கண்டு பிடிக்க பெரிதும் உதவியதாக போலீசார் தெரிவித்தனர் ..