Asianet News TamilAsianet News Tamil

கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. கோயம்பேடு சில்லறை விற்பனைக்கு தடை... புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்..!

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

koyambedu Prohibition on retail...tamilnadu government
Author
Chennai, First Published Apr 8, 2021, 2:25 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தினசரி பாதிப்பு 4000ஐ நெருங்கி உள்ளது. இந்ந்லையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகளின் விவரம்;- 


* இனி திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி

*  ஷாப்பிங் மால்கள், கடைகளில் 50% மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதி.

* ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.

*  உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி

*  உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11-00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

*  தமிழகத்தில் திருவிழா மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப் 10 முதல் தடை.

*  இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம்.

*  திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.

*  பேருந்துகளில் மக்கள் நின்றுக்கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

*  கோயம்பேடு உட்பட தமிழகத்தின் அனைத்து பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை

*  ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி

* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பாஸ் முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

*  வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் பயணிக்க அனுமதி

*  தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி

*  பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்தலாம்

*  உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், விழாக்களுக்கு அனுமதி

*  உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கையில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம். உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

*  அருங்காட்சியகம், பொழுதுப்போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், உயிரியல் பூங்காக்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி

*  சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*  நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி.

*  சுற்றுலா தளங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி.

Follow Us:
Download App:
  • android
  • ios