கேதார்நாத்தில், முதல் 45 நாட்களில் 7 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இதனால், முதல் சுற்றிலேயே அதிகமானோர் சென்று சாதனை படைத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம், இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் தீபாவளி வரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இப்பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், மற்ற காலங்களில் கோயில் மூடப்பட்டு இருக்கும்.

கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட கனமழையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையொட்டி இக்கோயிலில், பக்தர்களின் தரிசனம் கனிசமாக குறைந்தது. கடந்த ஆண்டு 6 மாத யாத்திரையில் அதிகபட்சமாக 7.32 லட்சம் பேர் யாத்திரை யாத்திரை சென்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு முதல் 45 நாட்களில், 7.35 லட்சத்துக்கு மேற்பட்டோர் புனித யாத்திரை சென்றனர். இதில், பாதயாத்திரை சென்றவர்கள், 36,000க்கு மேற்பட்டோர் என தெரிந்தது. அதில், ஜூன் 7 ல் 36,179 பேரும், ஜூன் 10 ல் 36,021 பேரும் சென்று தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி, கேதார்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து, ஏராளமானோர் கேதார்நாத் சென்று தரிசனம் செய்கின்றனர். இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு பக்தர்கள் திரண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆண்டு கேதார்நாத் யாத்திரை முடிய 5 மாதங்கள் இருக்கும நிலையில், அக்டோபர் இறுதிக்குள் கேதார்நாத்தில் தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடக்கும் என கூறப்பபடுகிறது.