திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆள்துளை கிணற்றில் விழுந்தான்,  கடந்த 25-10-2019 அன்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சுர்ஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் அவனை மீட்க சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிறுவனுக்காக நெஞ்சை உருக்கும் கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அது:- 

சோளக் கொல்லையில
 சொல்லாமப் போனவனே 
மீளவழி இல்லாம 
நீளவழி போனவனே. 

கருக்குழியிலிருந்து
 கண்தொறந்து வந்ததுபோல் 
எருக்குழியிலிருந்து
 எந்திரிச்சு வந்திரப்பா

 ஊர்ஒலகம் காத்திருக்கு
 உறவாட வா மகனே 
ஒரே ஒரு மன்றாட்டு
 உசுரோட வா மகனே"

 என , குழந்தை சுஜித் மீண்டு வர வைரமுத்து இவ்வாறு கவிதை எழுதிள்ளார்.