காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.! எந்தெந்த இடங்களிலும் தெரியுமா?

தமிழர் திருநாளான தை பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம்.

kaanum pongal.. Traffic change in Chennai today tvk

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளான தை பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- என்னது.. ஆளுநர் மனைவி லேடி கவர்னரா? எதுக்கு இப்படியொரு மலிவான அரசியலை செய்றீங்க? கொதிக்கும் வன்னி அரசு.!

இது தொடர்பான சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

* காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

* மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

*  வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள்

1. ஃபோர்ஷோர் சாலை
2. விக்டோரியா வார்டன் விடுதி
3. கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
4. பிரசிடென்சி கல்லூரி
5. மெட்ராஸ் பல்கலைக்கழகம்
6. டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
7.MRTS - சேப்பாக்கம்
8. லேடி வெலிங்டன் பள்ளி
9. ராணி மேரி மகளிர் கல்லூரி
10. சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
11. PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
12. செயின்ட் பீட் மைதானம்
13. அன்னை சத்யா நகர்
14. ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
15. தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

இதையும் படிங்க;- அரசு இயந்திரத்தை கட்சி கருவியாக மாற்றும் திமுக: பாஜக கண்டனம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios