Asianet News TamilAsianet News Tamil

சென்னை அதிர்ச்சி சம்பவம்.. 10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி. ஊழியர் தற்கொலை.. இதுதான் காரணமா?

சென்னை அருகே பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஷ்(27). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பயணியாற்றி வருகிறார். 

Jumping from the 10th floor IT Employee suicide in chennai
Author
First Published Nov 11, 2023, 3:31 PM IST

சென்னை துரைப்பாக்கத்தில் 10வது மாடியில் இருந்து குதித்து மென்பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகே பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஷ்(27). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பயணியாற்றி வருகிறார். இவரது ஷிப்ட் டைம்  3.30 மணியில் இருந்து இரவு 1:30 மணிவரை. பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு புவனேஷ் பணிக்கு வந்துள்ளார். 

பின்னர் இரவு வெளியே வந்த புவனேஷ் திடீரென 10 மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்தது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புவனேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரூ.10 லட்சம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios