எமன் ரூபத்தில் வந்த கடற்கரை பேருந்து! தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி! வயிற்றிலேயே குழந்தை பலி.!
எப்போதும் பரபரப்பாக செயல்படும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
சென்னை மெரினா சாலையில் இருசக்கர வாகனம் மீது கடற்படை பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவருடன் சென்ற நிறைமாத கர்ப்பிணி லலிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
எப்போதும் பரபரப்பாக செயல்படும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கவனக்குறைவால் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்திருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி லலிதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்! போலீஸ் குவிப்பு..!
விபத்து ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். கோபமடைந்த பொதுமக்கள் கடற்படை வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, கர்ப்பிணியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணின் கணவர் சிவா ரெட்டியும், கடற்படையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- 13 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக சீரழித்த 62 வயது கோயில் பூசாரி.. சரியான ஆப்பு வைத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்.!