Asianet News TamilAsianet News Tamil

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான 15 இடங்களில் அதிரடி சோதனை..!

சென்னை சவுகார்பேட்டை ஸ்டார்டன் முத்தையா தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கற்பூரம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மொத்தமாக வியாபாரம் செய்கிறார். கற்பூரம் தயாரிப்பு விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

Income tax inspection at 15 places owned by a Chennai businessman
Author
Chennai, First Published Sep 23, 2021, 6:28 PM IST

கற்பூரம் கொள்முதலில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து ராஜஸ்தான் தொழிலதிபருக்கு சொந்தமான வீடு அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் என 15 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சவுகார்பேட்டை ஸ்டார்டன் முத்தையா தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கற்பூரம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை நடத்தி வருகிறார். சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் மொத்தமாக வியாபாரம் செய்கிறார். கற்பூரம் தயாரிப்பு விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை வருமான வரித்துறை இணை கமிஷ்னர் தலைமையில் குழுவினர் தொழிலதிபர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சவுகார்பேட்டையில் உள்ள அவரது வீடும் குடோன் மற்றும் வேப்பேரியில் உள்ள அலுவலகம் அண்ணாநகரில் அலுவலகம், தொழிற்சாலை என  15 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Income tax inspection at 15 places owned by a Chennai businessman

கடந்த 2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் வருமானவரி செலுத்தப்பட்ட கணக்குகளை வைத்து சோதனை நடத்தி வருகிறது. அலுவலகங்களில் உள்ள கணக்குகள் கணினிகள், லேப்டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சோதனையின்போது பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. கற்பூரம் தயாரிக்கும் மூலப் பொருட்களை அவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

Income tax inspection at 15 places owned by a Chennai businessman

இந்த சோதனையில் கைப்பற்ற பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் பிறகுதான் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்து உள்ளார் என்பது தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios