தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,  அதில்  இதுவரை கொசு ஒழிப்பு நடவடிக்கையின் மூலம்  அபராதம் விதிக்கப்பட்டு சுமார் 39 லட்சம் ரூபாய் வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியானது.  தட்பவெப்ப சூழலுக்கேற்ப பல்வேறு காய்ச்சல்கள்  தமிழகத்தை தாக்கி வரும் நிலையில் ஆண்டுதோறும் மழைக்காலம் நெருங்கியவுடன் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து விடுகிறது.  குறிப்பாக  வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சுற்றுப்புற சூழல் சுகாதாரமாக இல்லாத நிலை,   மற்றும் திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி நிற்பது போன்றவை டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 

பெண்கள்,  சிறுவர்கள்,  தமிழகத்தில்  அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் நான்காயிரம் பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்துப் தெரிவித்துள்ள அதிகாரிகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன.  தமிழகம் முழுவதும் டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் சுற்றுப்புறங்களை வைத்துள்ள,  வீடு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து இதுவரை சுமார் 39 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு திருவள்ளூர்,  அரக்கோணம்,  திருநெல்வேலி,  உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்குநாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது .  இதற்கு சிறுவர்களில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு உயிரிழப்புகளும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன 

இந்நிலையில் பொது சுகாதாரத்துறை காய்ச்சல் உண்டாக்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  அளிக்கப்படும்  சிகிச்சையை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.