பிரிந்த கணவர் திரும்பி வந்தததால் பேச மறுப்பு தெரிவித்ததால் கள்ளக்காதலி வீட்டில் வெல்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் அடத்த கெருகம்பாக்கத்தை  சேர்ந்தவர் சந்துரு(36) வெல்டராக பணிபுரிந்து வந்தார். திருவான்மியூர் மீன் மார்க்கெட் அருகே உள்ள  குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லட்சுமி (43) இவரது கணவர் பாண்டுரங்கன் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகள்களை விட்டுவிட்டு பாண்டுரங்கன் பிரிந்து சென்றுவிட்டார். 

இந்நிலையில், தான் லட்சுமிக்கும் வெல்டர் சந்துருவுக்கும் நட்பாக பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் வீட்டில் தனிமையில் இருக்கும் போது அடிக்ககடி உல்லசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாண்டுரங்கன் திருவான்மியூருக்கு திரும்பி வந்து மனைவி மகள்களுடன்  சேர்ந்துவிட்டார். இதனையடுத்து, லட்சுமி கள்ளக்காதலன் சந்துருவிடம் பேச மறுத்து வந்துள்ளார்.

இதில், மனமுடைந்த சந்துரு நேற்று காலை 10 மணியளவில் லட்சுமியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். இதில். படுகாயமடைந்த அவைர மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.