தன் கணவருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

சென்னை ராமாபுரம் அண்ணாநகர், தாங்கல் தெருவை சேர்ந்தவர் தேவி (28). இவர் ராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக  மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 8 ஆண்டுகளாக ராஜேஷ் என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தேன். இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. 

ராஜேஷ் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து உதைக்கிறார். இதனால் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். பிறகு உறவினர்கள் எங்கள் இருவரையும் நேரில் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்தனர். 

இதனிடையே, அவர் கூறி மற்றொரு புகார் போலீசாரை அதிரடி வைத்தது. அதில், என் கணவர் ராஜேசுக்கு பல இளம்பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து எனது பெற்றோரை வீட்டிற்கு அழைத்து வந்து கணவரிடம் பேசினேன். அப்போது ராஜேஷ், எனது தாயாரை அவதூறாக தகாத வார்த்தையால் வசைப்பாடினார். 

பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை அடித்து உதைத்து வரும் கணவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் மற்றும் அவரது சகோதரர் முருகன் ஆகியோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க  வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.