சென்னையில் 4 குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடியை அடுத்த திருமலைநகரை சேர்ந்தவர் கண்ணன்(34). இவர் கூலி தொழிலாளி. இவரின் மனைவி சுந்தரி(29). இவர் அரக்கம்பாக்கத்தில்  உள்ள ஒரு செங்கல்சூளையில் வேலை செய்கின்றார். இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், சுந்தரிக்கும் செங்கல்சூளையில் வேலைசெய்யும் மோரை கன்னியம்மன் நகரை சேர்ந்த ஆனந்த்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் காலப்போக்கில் கணவருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். 

இதனையடுத்து, கடந்த 4ம் தேதி ஆனந்துடன் திடீரென மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இது தொடர்பாக கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சுந்தரியின் செல்போனுக்கு தொடர்புகொண்ட கண்ணன் நீ இல்லாமல் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை. இதனால், நான் விஷம் குடித்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் இறுந்துவிடுவேன் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் பயந்து போன சுந்தரி கள்ளக்காதலன் ஆனந்த்தடன் ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்தில் தங்சம் அடைந்தார். 

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து இருவரும் மயங்கி விழுந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார்அவர்களை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி அரசு மருத்துவமனையில் சுந்தரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது சுந்தரியின் கணவன் கண்ணன் விஷம் குடிக்கவில்லை என்பது தெரிந்தது.