சென்னை ஐஐடிக்கு ரூ.228 கோடி அள்ளிக் கொடுத்த முன்னாள் மாணவர்! கல்விக்காக மிகப்பெரிய நன்கொடை இதுதான்!
ரூ.228 கோடி தாராள நன்கொடை இந்திய வரலாற்றில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை ஆகும். இந்தப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடியில் ஒரு பகுதிக்கு 'கிருஷ்ணா சிவுகுலா பிளாக்' என்று பெயரிட்டுள்ளது.
சென்னை ஐஐடி நிறுவனத்துக்கு அதன் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவிடமிருந்து இதுவரை இல்லாத மிகப்பெரிய நன்கொடை கிடைத்துள்ளது. ரூ.228 கோடியை அவர் தான் படித்த கல்வி நிறுவனத்துக்காக வழங்கி இருக்கிறார்.
இந்த தாராள நன்கொடை இந்திய வரலாற்றில் ஒரு கல்வி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை ஆகும். இந்த வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடியில் ஒரு பகுதிக்கு 'கிருஷ்ணா சிவுகுலா பிளாக்' என்று பெயரிட்டுள்ளது. பெயரிடும் விழா செவ்வாயக்கிழமை நடைபெற்றது.
பெயரிடும் விழாவில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, முன்னாள் மாணவர்களின் டீன் மற்றும் கார்ப்பரேட் ரிலேஷன்ஸ் பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா மற்றும் பிற ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் எங்க பாத்தாலும் Zero is Good! எதுக்காக இப்படி விளம்பரம் பண்ணுறாங்க தெரியுமா?
இந்த நன்கொடை சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், ஆராய்ச்சிக்கு சிறப்பு மானியங்கள் வழங்குதல், இளங்கலை பெல்லோஷிப் திட்டம், விளையாட்டு அறிஞர் திட்டம் மற்றும் சாஸ்த்ரா இதழின் மேம்பாடு உள்ளிட்ட பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
கிருஷ்ணா சிவுகுலா பிளாக்கின் பராமரிப்பு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் சென்னை ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது.
யார் டாக்டர். கிருஷ்ணா சிவுகுலா?
டாக்டர். கிருஷ்ணா சிவுகுலா சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் எம்டெக் பட்டம் பெற்று 1980 இல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ஷிவா டெக்னாலஜிஸ் இன்க் மற்றும் இந்தோ எம்ஐஎம் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு சர்வதேச நிறுவனங்களை நிறுவியவர்.
பொறியியல் உற்பத்தி தொழில்நுட்பத்திலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாகப் பாராட்டப்படுகிறது. 1997ஆம் ஆண்டில், இவர் அதிநவீன மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் (எம்ஐஎம்) தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவரது INDO US MIM Tec நிறுவனம் MIM தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணியில் உள்ளது.
யார் இந்த விஜய்பத் சிங்கானியா? அம்பானி, அதானியை விட பணக்காரராக இருந்தவரின் நிலைமை இப்படியா!
கிருஷ்ணா சிவுகுலாக்குப் பாராட்டு:
பேராசிரியர் வி. காமகோடி கிருஷ்ணா சிவுகுலாக்கு நன்றியைத் தெரிவித்தார். "பல வருடங்களுக்குப் பிறகும் எங்கள் முன்னாள் மாணவர் தான் படித்த நிறுவனத்தை இன்னும் நினைவில் வைத்திருப்பது, கல்வி மட்டுமே மனித குலத்திற்கு நாம் வழங்கக்கூடிய ஒரே அழியாத செல்வம் என்ற உண்மையை வலுப்படுத்துகிறது. ஸ்ரீ கிருஷ்ணா சிவுகுலாவின் பெரிய பங்களிப்பிற்கு நன்றி. இதனால் பல மாணவர்கள் பயனடைவார்கள்" என்று அவர் கூறினார்.
"டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா தொழில்நுட்பத் துறையில் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, சிறந்த முன்னாள் மாணவரும்கூட. அவருடைய பணிவும் பெருந்தன்மையும் பல தலைமுறையினருக்கு முன்மாதிரியான பண்புகளாக நிற்கும்" என பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா பாராட்டினார்.
சென்னை ஐஐடி தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் கூறுகையில், "ஐஐடி மெட்ராஸின் மதிப்பிற்குரிய முன்னாள் மாணவரான டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவின் அசாதாரணமான தாராள மனப்பான்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
ஐஐடி மெட்ராஸ் நிதி திரட்டல்:
சென்னை ஐஐடி 2023-24 நிதியாண்டில் மொத்தம் ரூ..513 கோடியை நிதி திரட்டியது. இது முந்தைய ஆண்டை விட 135% அதிகமாகும். பழைய மாணவர்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள், CSR நிதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மானியங்கள் மூலம் இந்த நிதி திரட்டப்பட்டது. முன்னாள் மாணவர்கள் மூலம் திரட்டப்பட்ட தொகை மட்டும் ரூ.367 கோடி. இது முந்தைய ஆண்டை விட 282% அதிகமாகும்.
பிணங்களுக்கு உயிர் கொடுக்கும் ஜெர்மன் நிறுவனம்! மரணத்தை வெல்ல இதுதான் ஒரே வழி!