Asianet News TamilAsianet News Tamil

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. என்ன காரணம் தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்தது. 

IAS officer Malarvizhi house Anti-bribery department raids
Author
First Published Jun 6, 2023, 10:41 AM IST

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக புகார் எழுந்தது. ரூ.40 மதிப்புள்ள ரசீது புத்தகத்தை ரூ.135க்கு வாங்கியதில்  மொத்தம் ரூபாய் 1.32 கோடி முறைகேடு செய்ததாக  முன்னாள் ஆட்சியர் மலர்விழி உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். 

இதையும் படிங்க;- நுரையீரல் அழுகி செத்தவங்க குடும்பம் மூலம் கிடைக்குற காசுல தான் அரசே இயங்குதுனு சொல்ல வெட்கபடணும்.. வேல்முருகன்

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள தாய்சா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

IAS officer Malarvizhi house Anti-bribery department raids

இதேபோல் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருவூல காலனியில் உள்ள அவரது வீட்டில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  முறைகேடுகள் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  அதிமுகவில் இணையும் சுப்புலட்சுமி ஜெகதீசன்? எந்த அணி? மீண்டும் பரபரப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios