Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து அதிர்ச்சி... வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட பிரதீப் கவுர்..!

தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள பிரதீப் கவுர் தன்னை தானே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். 

I am in home quarantine because of high risk exposure to COVID19..Prabhdeep Kaur
Author
Chennai, First Published Jun 17, 2020, 5:19 PM IST

தமிழக மருத்துவ வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள பிரதீப் கவுர் தன்னை தானே 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளார். 

I am in home quarantine because of high risk exposure to COVID19..Prabhdeep Kaur

ஐசிஎம்ஆர். தமிழகப் பிரிவுக்கு துணை இயக்குநராக பிரதீப் கவுர் பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக அரசு கொரோனா தொற்று தொடர்பாக முதல்வருக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம் பெற்று அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல்  தினந்தோறும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களையும், மருத்துவ அறிவுரைகளை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் பிரதீப் கவுர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்றுவதற்கான அதிக ஆபத்து இருப்பதால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் சமூகத்தை காப்பதற்காக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார். கடந்த 2 நாட்கள் முன்னர் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது மருத்துவக்குழுவில்  பிரதீப் கவுர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios