ரத்த காயம்.. உடைந்து கிடந்த பற்கள்.. போதை மறுவாழ்வு மையத்தில் ராஜு உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்.!
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தார் அங்கு சென்று பார்த்தபோது ராஜுவின் உடலில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது தெரிந்தது. அவரது பற்கல் உடைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரற்று கிடந்தார். தொடர்ந்து தன் கணவனுக்கு என்ன நடந்தது என கேட்டு கலா மற்றும் அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
குடியை மறக்க போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவரை இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிட்டதாக உயிரிழந்த ராஜூவின் சகோதரி குற்றம்சாட்டியுள்ளார்.
போதை மறுவாழ்வு மையம்
சென்னை இராயப்பேட்டை சேர்ந்தவர் கலா (47) கணவர் ராஜு என்பவர் குடிபோதைக்கு அடிமையானவர் ஆவார். இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு மனைவியுடன் சென்ற ராஜு அங்கு மது அருந்திய நிலையில் மீண்டும் நேற்று மனைவி கலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். அதனைத் தொடர்ந்து மனைவி கலா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து ராயப்பேட்டையில் உள்ள " மெட்ராஸ் கேர் சென்டர் " என்ற போதை மறுவாழ்வு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டுக்கே வந்து ராஜுவை கூட்டிச் சென்றனர், போதைக்கு அடிமையான தனது கணவன் ராஜுவை குடிநோயிலிருந்து குணமாக்கி ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ராஜு உயிரிழந்துவிட்டதாக மறுவாழ்வு மையத்திலிருந்து தகவல் வந்தது.
உயிரிழப்பு
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கலா மற்றும் குடும்பத்தார் அங்கு சென்று பார்த்தபோது ராஜுவின் உடலில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது தெரிந்தது. அவரது பற்கல் உடைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரற்று கிடந்தார். தொடர்ந்து தன் கணவனுக்கு என்ன நடந்தது என கேட்டு கலா மற்றும் அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொறுப்பில் இருந்த கார்த்திக் என்பவரை கலாவின் குடும்பத்தினர் தாக்கினர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மரணத்தில் சந்தேகம்
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த ராஜீவின் குடும்பத்தாரை சமாதானப்படுத்தி, ராஜீவின் பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராஜுவின் மனைவி கலா இதுகுறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மதுபோதைக்கு அடிமையான தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்,