Chennai: சென்னையில் வினோதம்! புதிய வீட்டுக்கு சேவல் பலி கொடுக்கும் முயற்சியில் தானே பலியான கொத்தனார்
சென்னையில் புதிய வீட்டுக்கு சேவலை பலி கொடுக்கும் சடங்கின்போது வீட்டின் கொத்தனார் பலியான பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் புதிய வீட்டுக்கு சேவலை பலி கொடுக்கும் சடங்கின்போது வீட்டின் கொத்தனார் பலியான பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.
புதிய வீடு கட்டும்போது, கிரஹப்பிரவேஷத்துக்கு முன்பாக துஷ்ட சக்தியை விரட்டும் விதத்தில் சேவல், கோழியை அறுத்து ரத்தப் பலி கொடுப்பதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இ்ந்த சடங்கை செய்தபோது கொத்தனார், மூன்றாவது மாடியிலிருந்து விழிந்து உயிரிழந்தார், ஆனால், பலி கொடுப்பதற்காக கொண்டுவந்த சேவல் பாதுகாப்பாக பறந்து உயிர்தப்பியது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
பல்லாவரம் பொழிச்சலூரைச் சேர்ந்தவர் டி லோகேஷ்(48) இவர் சொந்தமாக 3 மாடி வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கொத்தனார் மற்றும் மேஸ்திரியாக ராஜேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். வீட்டுக்கு விரைவில் புதுமனை புகுதல் விழா நடத்த இருந்ததால், வீட்டுக்கு சேவல் அறுத்து ரத்தப் பலி கொடுக்கும் சடங்கை நடத்த வீட்டு உரிமையாளர் முடிவு செய்தார்.
இந்த சடங்கை கொத்தனார் ராஜேந்திரன் பூஜாரியாக இருந்து செய்வதற்கு தயாரானார். இதையடுத்து, நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சேவல் கொண்டு வந்த ராஜேந்திர அதை அறுத்து பலி கொடுக்க தேவையான பூஜைகளைச் செய்தார்.
விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்குகள்… திரும்பி அதே நாட்டிற்கு அனுப்பி வைத்த சுங்கத்துறை!!
வீட்டின் 3வது மாடிக்குச் செல்வதற்காக லிப்ட் அமைப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் லிப்ட் அமைக்கப்படவில்லை. சேவலை எடுத்துக்கொண்டு 3வது மாடிக்குச் சென்ற ராஜேந்திரன் பூஜைகளை முடித்துவிட்டு, சேவலை பலிகொடுக்கவந்தபோது, லிப்ட் அமைப்பதற்கான பள்ளத்தில் 3வது மாடியிலிருந்து ராஜேந்திரன் கீழே விழுந்தார்.
ராஜேந்திரனை உடனடியாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பலி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சேவல் தப்பித்து பாதுகாப்பாக பறந்துசென்றது, ஆனால் பலி கொடுக்கவந்த கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் மனைவி தற்கொலை.. வேதனையில் கணவர் எடுத்த விபரீத முடிவு..!
வீடு கட்டும்போது 80 சதவீதப் பணிகள் முடிந்துவி்ட்டால் புதுமனை புகுதல் நிகழ்ச்சி நடத்தும்முன் இதுபோன்று சேவலை அறுத்து ரத்தப்பலி கொடுப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ராஜேந்திரன் குறித்த எந்தவிவரமும் தெரியவில்லை அவர் எந்த ஊர், உறவினர்கள் யார் எனத் தெரியாததால் அவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது
இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது