60 ஆண்டுகளுக்கு பிறகு பெய்ய உள்ள மாபெரும் கனமழை காரணமாக ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’’ தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல்- 30, மே 1ம் தேதி  கனமழை முதல் மிக கனமழை பெய்யும்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் . வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றதழுத்த தாழ்வு மையம் இலங்கை வழியாக தமிழகத்தை கடக்கும்.

 

28ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். 29ம் தேதி தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்யும். 30, மே-1ம் தேதி தமிழகத்தில் கடுமையான மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  115.6 முதல் 204.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. கஜா புயலின் போது நாகபட்டினத்தில் பதிவான மழையின் உச்சபட்ச அளவு 48.4 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. அதற்கே டெல்டா மாவட்டங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சின்னாபின்னமாகி இன்று வரை மீளமுடியாமல் தவித்து வருகிறது.

 

இந்நிலையில் 30ம் தேதி வர உள்ள புயலில் 115 முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியையும், பதற்றையும் ஏற்படுத்தி உள்ளது.  35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மைய்யம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகள் கழித்து வரும் பெரும் புயல் இது எனக்கூறப்படுகிறது.