Asianet News TamilAsianet News Tamil

#TamilnaduRain 17 மற்றும் 18-ல் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை ; 5 நாட்களுக்கு வெளித்து வாங்கப்போகும் மழை

18-ம் தேதி அரபிக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக இரண்டு நாட்கள் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

Heavy rain warning for Chennai on 17th and 18th
Author
Chennai, First Published Nov 15, 2021, 12:48 PM IST

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சமீபத்தில் பெய்த கன மழை தமிழகத்தயே உருக்குலைத்துள்ளது. அதிலும் சென்னைக்கு அருகே தாழ்வு பகுதி கரையை கடந்ததால் பெருநகரம் தற்போது வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் . இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 15-ந் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதற்கிடையே வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு  மிக கனமழைக்கான எச்சரிக்கையும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கோவை, சேலம், தருமபுரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும்  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காண மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அதோடு நாளை 16-ம் தேதி நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  மேலும், நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மேலும் வலுப்பெற உள்ளவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை   விடுத்துள்ளது.

இந்நிலையில் அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர தாழ்வு மண்டலமாக உருமாறி வாடா தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,  இது தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதோடு வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் அரபிக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக இரண்டு நாட்கள் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios