Asianet News TamilAsianet News Tamil

TamilnaduFlood கனமழை எச்சரிக்கை.. 11 மாவட்டங்களுக்கு 10 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..!

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்  உள்ளிட்ட  அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Heavy rain warning .. 10 monitoring officers appointed for 11 districts
Author
Chennai, First Published Nov 10, 2021, 5:17 PM IST

வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்  உள்ளிட்ட  அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வு, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain warning .. 10 monitoring officers appointed for 11 districts

இதனால் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை பார்வையிட 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 சிறப்பு அதிகாரிகளின் விவரம்;- 

* கடலூர் - அருண் ராய்

*  திருச்சி - ஜெயகாந்தன்

*  வேலூர் - நந்தக்குமார்

*  நாகை - பாஸ்கரன்

*  மதுரை - வெங்கடேஷ்

*  ராணிப்பேட்டை - செல்வராஜ்

*  திருவள்ளூர் - ஆனந்தகுமார்

*  அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்

*  விருதுநகர் - காமராஜ்

*  ஈரோடு - பிரபாகர் ஆகியோர் தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் அதிகாரிகள் ஈடுபடுவர் என்றும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios